கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள்- SIR என்றால் உதயநிதிக்கு என்னவென்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன்
- 2000-க்கு முன் 10 முறையும், 2000-க்குப் பின் 3 முறை SIR நடைபெற்று இருக்கிறது.
- SIR நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு.
கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இதற்கு முன்பு SIR நடைபெறவில்லையா?
* 2000-க்கு முன் 10 முறையும், 2000-க்குப் பின் 3 முறை SIR நடைபெற்று இருக்கிறது.
* ஏதோ பா.ஜ.க.வே பூதத்தைக்கொண்டு வந்தது போல கொடி பிடித்து போராட்டம் செய்வது ஏன்?
* வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு சூழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
* SIR என்றால் என்னவென்றே துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தெரியவில்லை. வாக்காளர் பட்டியல் ரிவிஷனை ரெஸ்டிரிக்ஷன் என்று கூறுகிறார்.
* SIR நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு.
* ஒரு இடத்தில் கூட வருமான வரித்துறை பதிவு செய்த வழக்குகள் பொய்யாகவில்லை.
* கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள் உள்ளனர். இதுபோன்ற போலி வாக்காளர்களை நீக்கவே SIR பணி.
இவ்வாறு அவர் கூறினார்.