தமிழ்நாடு செய்திகள்
null

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிப்பு

Published On 2025-08-25 17:54 IST   |   Update On 2025-08-25 18:07:00 IST
  • நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை செப்.5ம் தேதி வழங்கப்படும்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதைமுன்னிட்டு, ஆண்டுதோறும் நாட்டின் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.

அதன்படி, நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்கள் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பிஎஸ் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை செப்.5ம் தேதி வழங்கப்படும்.

Tags:    

Similar News