தமிழ்நாடு செய்திகள்

பொதுமக்கள் விருப்பமின்றி மருத்துவ கழிவு ஆலையை அமைக்க வேண்டாம்- அமைச்சர் முன்னிலையில் தமிழரசி பரபரப்பு பேச்சு

Published On 2025-04-20 11:00 IST   |   Update On 2025-04-20 11:00:00 IST
  • மானாமதுரை சிப்காட்டில் தனியார் உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்கப்பட உள்ளது.
  • மக்களின் எதிர்ப்பை மீறி எதையும் செய்யாதீர்கள் என்று மாவட்ட கலெக்டரிடமும், அமைச்சரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

சிவகங்கை:

தமிழக முதலமைச்சரால் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்ட "கலைஞர் கைவினைத் திட்டம்" விழா சிவகங்கையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு ரூ.399.79 லட்சம் மதிப்பீட்டில் 174 கைவினை தொழில்முனைவோர்களுக்கு கடனுதவிகள், மானியங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கலந்து கொண்டார். அவர் அமைச்சர் முன்னிலையில் பேசியதாவது:-

மானாமதுரை சிப்காட்டில் தனியார் உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையை மக்கள் விரும்பவில்லை. எனவே ஆலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி எதையும் செய்யாதீர்கள் என்று மாவட்ட கலெக்டரிடமும், அமைச்சரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழரசி எம்.எல்.ஏ. மருத்துவ கழிவு ஆலையை மக்கள் விருப்பத்துக்கு எதிராக அமைக்க வேண்டாம் என அமைச்சர் முன்னிலையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News