கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்படப்போகிறது என மதியம் 3.15 மணிக்கே வலைதளப்பதிவு: உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு புகார்
- விஜய் பிரசாரத்தின்போது செருப்பு வீசப்பட்டது. அப்போது கூட கூடத்தில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை.
- இடையூறாக இருக்கும் என்பதால் வேலுச்சாமிபுரத்தில் ஜனவரியில் அனுமதி மறுத்த நிலையில் செப்டம்பர் மாதம் அனுமதி.
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது, கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரசாரத்திற்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்னும் த.வெ.க. சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அதேவேளையில் த.வெ.க. கட்சி நிர்வாகிகளின் குறைபாடுதான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என அரசு சார்பில் குற்றம்சாட்டுப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்ப விசாரணைக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், கூட்ட நெரிசலுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரித்திக்கின் தந்தை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரனா வழக்கறிஞர் வாதாடியபோது தெரிவித்ததாவது:-
* கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படப்போகிறது என மதியம் 3.15 மணிக்கே திமுக உறுப்பினர் ஒருவர் வலைதளப்பதிவு.
* பதிவு போட்டவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்
* இடையூறாக இருக்கும் என்பதால் வேலுச்சாமிபுரத்தில் ஜனவரியில் அனுமதி மறுத்த நிலையில் செப்டம்பர் மாதம் அனுமதி.
* திடீரென காவல்துறை கூட்டத்திற்குள் தடியடி நடத்தியது. எதற்கு தடியடி நடக்கிறது எனத் தெரியாமல் பலர் ஓடினர்.
* விஜய் பிரசாரத்தின்போது செருப்பு வீசப்பட்டது. அப்போது கூட கூடத்தில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை.
* 600 போலீசார் பாதுகாப்பில் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் எங்கே இருந்தார்கள்?.
* கூட்ட நெரிசலில் ஒரு போலீசாருக்கு கூட காயம் ஏற்படவில்லை. ஏன்?
* இந்த விவகாரத்தில் பல்வேறு குழப்பங்கள் உளள்து.
இவ்வாறு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.