தமிழ்நாடு செய்திகள்

ரெயில்வே கேட்டை திறக்கும்படி நான் கூறவில்லை- வேன் டிரைவர் மறுப்பு

Published On 2025-07-08 10:48 IST   |   Update On 2025-07-08 11:05:00 IST
  • ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • வேன் டிரைவர் கூறியதால்தான் ரெயில்வே கேட்டை திறந்தேன் என கேட் கீப்பர் கூறினார்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி வேன் டிரைவர் சங்கர், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரிடம், ரெயில்வே கேட் கீப்பரிடம் நீங்கள் கூறியதால் தான் ரெயில்வே கேட்டை திறந்தேன் என தெரிவித்ததாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளதாக கேட்டோம்.

அப்போது டிரைவர் சங்கர் பேச முடியாத நிலையிலும் அழுது கொண்டு நான் எதுவும் கூறவில்லை என தலையை ஆட்டி காண்பித்தார்.

Tags:    

Similar News