தமிழ்நாடு செய்திகள்

மலைப்பகுதி மாற்றுத் திறனாளிகளுக்கும் விடியல் பயணம்: அரசாணை வெளியீடு

Published On 2025-10-10 18:14 IST   |   Update On 2025-10-10 18:14:00 IST
  • சாதாரணக் கட்டண பேருந்தில் பெண்கள் கட்டணமில்லைா பயணம் மேற்கொள்ளலாம்.
  • மலைப்பகுதியில் மாற்று திறனாளிகள் இனிமேல் விடியல் பயணம் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.

தமிழகத்தில் சாதாரண கட்டண பேருந்தில் பெண்கள் கட்டணமில்லா பயணம் செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு விடியல் பயணம் என பெயரிடப்பட்டுள்ளது. விடியல் பயணம் என பெயரிடப்பட்டு இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.

மலைப் பகுதியிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில, மலைப்பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தி, அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் வரும் ஒரு துணையாளர் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News