தமிழ்நாடு செய்திகள்

அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆசியுடன் போதைப்பொருள் புழக்கம் - தமிழக அரசு மீது ஆளுநர் அடுக்கிய குற்றச்சாட்டுகள்

Published On 2025-08-14 20:23 IST   |   Update On 2025-08-14 20:23:00 IST
  • மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் சான்றிதழ் பெற்றவர்களாக மட்டுமே வெளியேறுகின்றனர்.
  • ஏழ்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் சமரசம் செய்யப்பட்டுள்ளது.

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது.

தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன்தான் போதைப்பொருள் விநியோகம் நடைபெறுகிறது. கஞ்சா உள்ளிட்ட ரசாயன போதைப்பொருள்களின் பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அரசுப் பள்ளிகளில் கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் சான்றிதழ் பெற்றவர்களாக மட்டுமே உள்ளனர்.

ஏழ்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கும் பிறருக்கும் இடையேயான கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது.

சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளான பிறகும், பொதுப்பாதையைப் பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல்ரீதியாகத் தாக்கப்படும் பாகுபாடு நிலவுகிறது நாம் அவமானப்பட வேண்டியது.

இளைஞர்களிடையே தற்கொலை விகிதங்கள் தேசிய சராசரியை விட தமிழகத்தில் அதிகரித்துள்ளது. 

தமிழ் மொழியும் கலாசார மரபும் தேசத்தின் பெருமை. தமிழ் மொழி, தமிழ் மரபு, தமிழ்க் கலாசாரத்தின் மிகப்பெரும் அபிமானி நமது பிரதமர் மோடிதான்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News