தமிழ்நாடு செய்திகள்
பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை
- நாளை மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.
- உத்தரவு மீன்வள கூட்டுறவு சங்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.
சூரிய ஒளிவட்ட ஆய்வுக்கான ஐரோப்பிய செயற்கைகோளை சுமந்து கொண்டு நாளை (புதன்கிழமை) விண்ணில் பாய இருக்கும் பி.எஸ்.எல்.வி.- சி-59 ராக்கெட்டுக் கான 25 மணி நேர கவுண்ட் டவுன் இன்று பகல் 3.08 மணிக்கு தொடங்குகிறது. இதனை முடித்துக்கொண்டு நாளை (புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.
இந்த நிலையில், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மீன்வள கூட்டுறவு சங்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி 59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.