தமிழ்நாடு செய்திகள்

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2025-10-28 19:50 IST   |   Update On 2025-10-28 19:50:00 IST
  • 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு.
  • நவம்பர் 30ஆம் தேதிக்குள் பணி அனுபவ சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் நவம்பர் 10ஆமி தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 30ஆம் தேதிக்குள் பணி அனுபவ சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Similar News