தமிழ்நாடு செய்திகள்

அவர் காத்திட்ட இரு மாணவர்களின் வழியே பீட்டர் அவர்கள் நிச்சயம் வாழ்வார் - இ.பி.எஸ்.

Published On 2025-06-03 16:38 IST   |   Update On 2025-06-03 16:38:00 IST
  • குழித்துறை தடுப்பணையில் 2 சிறுவர்கள் தவறி விழுந்தனர்.
  • பீட்டர் ஜான்சன் இரண்டு மாணவர்களையும் காப்பாற்றினார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோத்தில் உள்ள குழித்துறை தடுப்பணையில் மனோ (17) அகிலேஸ் (12) ஆகிய 2 சிறுவர்கள் தவறி விழுந்தனர்.

அதை பார்த்த பீட்டர் ஜான்சன் என்பவர் தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் இறங்கி இரண்டு மாணவர்களையும் காப்பாற்றி கரை ஏற்றிவிட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்நிலையில், பீட்டர் ஜான்சனின் இறப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களை, அவ்வழியே சென்ற பீட்டர் என்பவர் தன் உயிரை துச்சமென எண்ணி, மாணவர்களைக் காப்பாற்றி, தன் இன்னுயிரை நீத்துள்ளார்.

தத்தளிக்கும் மாணவர்களை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காத்திட்ட பீட்டர் அவர்கள், தமிழக மக்களின் உயரிய மானுடவிய விழுமியத்தின் உதாரணம்.

இறந்தாலும் அனைத்தையும் கொடுக்கும் வாழை போல், தன் உயிரைத் தியாகம் செய்திடினும், அவர் காத்திட்ட இரு மாணவர்களின் வழியே பீட்டர் அவர்கள் நிச்சயம் வாழ்வார்!" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News