தமிழ்நாடு செய்திகள்

காட்பாடி அருகே தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

Published On 2025-05-06 14:53 IST   |   Update On 2025-05-06 14:53:00 IST
  • சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது.
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டான் துளசியை சேர்ந்தவர் மேத்தா கிரிரெட்டி. இவர் வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் ஒரே காரில் காட்பாடிக்கு வந்தனர்.

ஓடை பிள்ளையார் கோவில் அருகே மெயின் ரோட்டை ஒட்டி உள்ள மேத்தா கிரிரெட்டி அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது.

பின்னர் காலை 7.30 மணிக்கு தொண்டான்துளசியில் உள்ள மேத்தா கிரிரெட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

Tags:    

Similar News