null
செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணி இருக்குமோ? நயினார் நாகேந்திரன் சந்தேகம்
- 6 பேர் சென்றோம். ஒன்றிணைக்க சொன்னோம் என்றார்.
- அந்த 6 பேர் யார் என்று தெரியவில்லை. யாரிடம் சொன்னார்கள் என்பதையும் அவர் தெளிவாக சொல்லவில்லை.
அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் ஏற்பட்டபோது, டெல்லியில் சென்று இரண்டு மூன்று முறை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் "பா.ஜ.க. என்னை அழைத்து அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் எனப் பேசியது" எனக் கூறினார்.
இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன் "அவர் அதிமுக-வில் இருக்கிறார். ஒருங்கிணைக்க வேண்டும் என்று யாரிடம் சொன்னார். 6 பேர் சென்றோம். ஒன்றிணைக்க சொன்னோம் என்றார். அந்த 6 பேர் யார் என்று தெரியவில்லை. யாரிடம் சொன்னார்கள் என்பதையும் அவர் தெளிவாக சொல்லவில்லை.
செங்கோட்டையன் விவகாரத்தில் கூட திமுக பின்னணி இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது" என்றார்.