தமிழ்நாடு செய்திகள்

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை- டி.ஜி.பி.சங்கர் ஜிவால்

Published On 2025-07-11 11:04 IST   |   Update On 2025-07-11 11:04:00 IST
  • பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பயங்கரவாதிகள் 2 ஆப்ரேஷன்கள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • பிற மாநிலங்களில் துணிக்கடை, மளிகைகக்டை உள்ளிட்ட தொழில்கள் நடத்தி தலைமறைவாக இருந்தவர்கள் பிடிபட்டுள்ளனர்.

சென்னை:

தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பயங்கரவாதிகள் கைது குறித்து விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:-

* கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி டெய்லர் ராஜா 30 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி உள்ளார். கர்நாடகாவில் பதுங்கியிருந்த டெய்லர் ராஜாவை தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப்படை கைது செய்துள்ளது.

* பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பயங்கரவாதிகள் 2 ஆப்ரேஷன்கள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* பிற மாநிலங்களில் துணிக்கடை, மளிகைகக்டை உள்ளிட்ட தொழில்கள் நடத்தி தலைமறைவாக இருந்தவர்கள் பிடிபட்டுள்ளனர்.

* ஆந்திர போலீசாருடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கோவை போலீசார் சிறப்பாக செயல்பட்டனர்.

* குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

Tags:    

Similar News