தமிழ்நாடு செய்திகள்

இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம்... பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது இதனால் தான்!

Published On 2025-07-08 11:49 IST   |   Update On 2025-07-08 11:49:00 IST
  • விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
  • ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார்.

பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதிகப்படியான ரெயில் போக்குவரத்து உள்ள பகுதியில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் உள்ளது. இண்டர் லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால் சிவப்பு சிக்னல். மூடப்பட்டால் பச்சை சிக்னல் இருக்கும்.

ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.

இண்டர் லாக்கிங் இல்லாததால் கேட் திறக்கப்பட்டபோது சிவப்பு சிக்னல் விளக்கு எரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News