தமிழ்நாடு செய்திகள்

சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

Published On 2025-04-06 08:46 IST   |   Update On 2025-04-06 08:46:00 IST
  • சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
  • 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை விமானநிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உள்பட உயரதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்படி சுங்க இலாகா முதன்மை கமிஷனராக பணியாற்றி வந்த ரமாவதி சீனிவாச நாயக், சென்னை வடக்கு சரக்கு மற்றும் சேவை வரித்துறை முதன்மை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோன்று, கூடுதல் துணை கமிஷனர் பெரியண்ணன், சுங்க இலாகா துணை கமிஷனர்கள் சரவணன், பனீந்திர விஷ்சபியாகாதா, அஸ்வத் பாஜி, பாபுகுமார் ஜேக்கப், சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் சென்னை-1 கமிஷனராக பணியாற்றி வந்த தமிழ்வளவன் பதவி உயர்வு செய்யப்பட்டு, சென்னை விமானநிலையத்தின் புதிய சுங்க இலாகா முதன்மை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோன்று டெல்லி, கொல்கத்தா, விஜயவாடா, செகந்திரபாத், வதோதரா. பாட்னா, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வந்த 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வமான உத்தரவை மத்திய அரசின் துணை செயலாளர் ஷீரேஷ் குமார் கவுதம் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News