சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாலூட்டும் அறைகள்- மெட்ரோ நிர்வாகம்
- மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
- அதிகபட்சமாக 30.04.2025 அன்று 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 30.04.2025 அன்று 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னையின் போக்குவரத்து வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் தினமுன் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் தாய்மார்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், "குழந்தைகளுடன் பயணம் செய்கிறீர்களா? சென்னையின் முக்கிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வசதியான உணவு அறைகளை அனுபவியுங்கள். அம்மாக்களுக்கு ஒரு தனிப்பட்ட மற்றும் அமைதியான இடத்தை வழங்குகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.