தமிழ்நாடு செய்திகள்

2026 சட்டசபை தேர்தல்: தமிழ்நாடு பாஜக-வுக்கான பொறுப்பாளர்கள் நியமனம்

Published On 2025-09-25 16:20 IST   |   Update On 2025-09-25 16:20:00 IST
  • பீகார் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமனம்.
  • தமிழக பொறுப்பாளரான பைஜெயந்த் பாண்டாவை நியமித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களிலும், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்த வருடமும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மேலிடம், மூன்று மாநிலத்திற்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

தமிழகத்திற்கு பாஜக எம்.பி. பைஜெயந்த் பாண்டாவை பொறுப்பாளராகவும், அவருக்கு உதவியாக விமானப் போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மோஹோலையும் நியமித்துள்ளது.

மேற்கு வங்க மாநில பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவை நியமித்துள்ளது. அவருக்க உதவியாக பொறுப்பாளராக திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லாப் டெப்பை நியமித்துள்ளது.

பீகார் மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. அவருக்கு உதவியாக மற்றொரு மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நியமித்துள்ளது.

Tags:    

Similar News