தமிழ்நாடு செய்திகள்
பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே கைவிடப்பட்ட 3 மாத குழந்தை மீட்பு
- குழந்தையின் அழுகுரல் கேட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டனர்.
- குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே 3 மாத குழந்தையை துணியால் சுற்றி பை ஒன்றில் பால் பாட்டிலுடன் மர்ம நபர்கள் விட்டு சென்றுள்ளனர்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டனர்.
போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார், வள்ளுவர் கோட்டம் பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க முடிவு செய்தனர்.
பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.