தமிழ்நாடு செய்திகள்

சாதி மறுப்புத் திருமணம் செய்வோரை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - கிருஷ்ணசாமி

Published On 2025-08-07 03:45 IST   |   Update On 2025-08-07 03:45:00 IST
  • கவின் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்டார்.
  • புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான ஐடி பொறியாளர் கவின் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த ஆணவக்கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பான பேசுபொருளாகி உள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதாவது, "சாதி மறுப்புத் திருமணம் செய்வோரை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பள்ளி, கல்லூரிகள், தெரு, சாலைகளின் பெயர்களில் சாதிகளை நீக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தி உள்ளார். இதேபோல் விசிக தலைவர் திருமாவளனும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News