தமிழ்நாடு செய்திகள்

பிரபல யூடியூபர் 'பிரியாணி மேன்' மேலும் ஒரு வழக்கில் கைது

Published On 2024-08-08 08:34 IST   |   Update On 2024-08-08 08:34:00 IST
  • செம்மொழி பூங்கா தொடர்பாக இவர் வெளியிட்ட பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
  • கிறிஸ்துவ மத போதகர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு

சென்னை:

'பிரியாணி மேன்' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் அபிஷேக் ரபி.

இவர் தன்னுடைய யூட்யூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

செம்மொழி பூங்கா தொடர்பாக இவர் வெளியிட்ட பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தனது யூடியூப் பக்கத்தில் அபிஷேக் ரபி, பெண்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறி இருந்ததாக பெண் ஒருவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூபர் அபிஷேக் ரபி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், யூடியூபர் அபிஷேக் ரபி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக பிலிப் நெல்சன் லியோ என்ற மத போதகர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News