தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல் அருகே ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை

Published On 2022-12-28 13:47 IST   |   Update On 2022-12-28 13:47:00 IST
  • அருண்குமார் தொடர்ந்து செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடி வந்ததாக தெரிகிறது.
  • போலீசார் அருண்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகில் உள்ள கருமன் கிணறு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார் (24). திருமணம் ஆகாதவர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அதேபகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அருண்குமார் சடலமாக மிதந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கள்ளிமந்தையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினருடன் வந்தனர். அவர்கள் வாலிபரின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருண்குமார் தொடர்ந்து செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடி வந்ததாக தெரிகிறது. அதில் ஏற்பட்ட தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

போலீசார் அருண்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News