தூத்துக்குடியில் தொழிலாளி கொலை- சிறுவன் உள்பட 3 பேர் கைது
- கருத்து வேறுபாடு காரணமாக சார்லஸ் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
- சாலையில் படுத்து தூங்குவது தொடர்பாக சார்லசுக்கும், அங்குள்ள சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு வாடி தெருவை சேர்ந்தவர் சார்லஸ் (வயது42). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவர் இரவு நேரங்களில் சாலையோரம் படுத்து தூங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சார்லஸ் அப்பகுதியில் சாலையோரம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் சாலையில் படுத்து தூங்குவது தொடர்பாக சார்லசுக்கும், அங்குள்ள சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நேற்றிரவு அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சிலோன் காலனியை சேர்ந்த சின்னமுத்து(39), எட்டயபுரம் அருகே உள்ள துரைச்சாமி புரத்தைச்சேர்ந்த குருசாமி (38) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் சார்லசை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.