தமிழ்நாடு செய்திகள்

சின்னம்மாள் தீக்குளிக்க முயன்றதையும் போலீசார் தடுத்து நிறுத்தியதையும் காணலாம்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி-பரபரப்பு

Published On 2024-02-26 13:35 IST   |   Update On 2024-02-26 13:35:00 IST
  • சின்னம்மாள் என்பவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
  • எனது கணவருக்கு சொந்தமாக வீடும், ரூ.80 லட்சம் பணமும் உள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் அவினாசி கான்வெண்ட் வீதியை சேர்ந்தவர் சின்னம்மாள். இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கையில் மண்எண்ணெய் கேன் கொண்டு வந்த அவர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சின்னம்மாள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் நஞ்சப்பனுக்கு 2 மனைவிகள். எனக்கு குழந்தை இல்லை. எனது கணவர் இறந்து விட்டார். எனது கணவருக்கு சொந்தமாக வீடும், ரூ.80 லட்சம் பணமும் உள்ளது. அதனை முதல் மனைவி அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். எனவே வீடு, பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

Tags:    

Similar News