தமிழ்நாடு

விபத்தில் சிக்கியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்பதையும், படிக்கட்டுகள் இடிந்து கிடப்பதையும் காணலாம்.

கட்டிட பணியின்போது சுவர் இடிந்து விழுந்து பெண் பலி- 3 தொழிலாளர்கள் படுகாயம்

Published On 2023-07-01 07:38 GMT   |   Update On 2023-07-01 07:38 GMT
  • கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது.
  • உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை:

மதுரை விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

தற்போது கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது. இன்று காலை கட்டிடத்தின் படிக்கட்டு அமைந்துள்ள பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த ஜோதி (52), மூக்காயி (50), தொண்டிச்சாமி (55), கட்டையன்(43) ஆகியோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது படிக்கட்டு, சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 பேரும் சிக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவலறிந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றினர்.

அப்போது அதில் சிக்கியிருந்த மூக்காயி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தலைமறைவான கட்டிட பொறியாளர், காண்டிராக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News