தமிழ்நாடு செய்திகள்

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்- விக்கிரமராஜா வலியுறுத்தல்

Published On 2022-10-29 12:35 IST   |   Update On 2022-10-29 12:35:00 IST
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலில் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.
  • விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் வணிக நோக்காக பார்க்காமல் சுய பரிசோதனை செய்து பின்னர் விளம்பரத்தில் நடிக்க வேண்டும்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த தடப்பெரும் பாக்கம் வெள்ளகுளம்சாலையில் ஸ்ரீ செந்தூர் முருகன் டைல்ஸ் அண்ட் டோர்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று ஷோரூமை திறந்து வைத்தார்.

குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க கூடாது என்பதில் வணிகர் சங்க பேர மைப்பினர் உறுதியாக உள்ளனர். அதனையும் மீறி விற்பனை செய்பவர்களுக்கு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு அளிப்பதில்லை. மின் கட்டணமும், கட்டிட வரியும் அதிகளவில் உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தையும், கட்டிட வரியையும் தமிழக அரசு குறைக்க வேண்டும். சிறுகுறு தொழில் பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலில் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். நாடு முழுவதும் பொருட்களை பேக்கிங் செய்வது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஒரே சட்டம் அமல்படுத்தி வணிகர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் வணிக நோக்காக பார்க்காமல் சுய பரிசோதனை செய்து பின்னர் விளம்பரத்தில் நடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஷோரூம் திறப்பு விழாவில் விஜய ராஜேந்திரன் நாடார், கனகராஜ் சோமசுந்தரம், குணசேகர் முத்துக்குமார், சென்னை மாவட்ட தலைவர் எட்வர்ட், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், நந்தன், முத்துப்பாண்டியன், முருகன், பால் பாண்டி, வேலு ஆசாரி, ஏகாம்பரநாதன், பாலகி ருஷ்ணன் கர்ணா யுவராஜ் அப்துல்காதர் வெல்டன் வாசகர் சந்தனகுமார், சுரேஷ்குமார், ஜிவிஎன் குமார், மீஞ்சூர்ரியாஸ், முகமது அலி, செல்லத்துரை, துரையரசன், பகிர்முகமது, மாதர்பாக்கம் பாலமுருகன், அஜிஸ் அகமது உள்பட பேரமைப்பு நிர்வாகிகள் ஏராளனோர் கலந்து கொண்டனர்.

Similar News