தமிழ்நாடு செய்திகள்
விழுப்புரத்தில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெற்றோர் வீட்டிலும் சோதனை
- சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக இருப்பவர் மலர்விழி.
- சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக இருப்பவர் மலர்விழி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். மலர்விழியின் பெற்றோர் விழுப்புரம் 36-வது வார்டு சாலமேடு புகாரி நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களது வீட்டிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். சோதனை முடிந்த பின்னரே ஆவணங்கள் ஏதும் சிக்கியதா? என்பது தெரியவரும்.
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெற்றோர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.