தமிழ்நாடு

கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் சிறப்பு அதிகாரியாக தூத்துக்குடி டி.எஸ்.பி. நியமனம்

Published On 2023-04-29 06:27 GMT   |   Update On 2023-04-29 06:27 GMT
  • முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த 25-ந்தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • வழக்கை முறப்பாடு இன்ஸ்பெக்டர் ஜமால் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த 25-ந்தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணல் கடத்தல் தொடர்பாக லூர்து பிரான்சிஸ் போலீசில் புகார் செய்தததால் அவரை கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு, அவரது நண்பரான மாரிமுத்து ஆகிய 2 பேர் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் அவர்கள் இருவரையும் விசாரணைக்காக காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வழக்கை முறப்பாடு இன்ஸ்பெக்டர் ஜமால் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கை விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக தூத்துக்குடி ஊரக டி.எஸ்.பி. சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கர்க் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News