தமிழ்நாடு

தமிழகத்தில் 1000 புதிய பஸ்கள் வாங்க ரூ.420 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

Published On 2022-11-30 07:36 GMT   |   Update On 2022-11-30 07:47 GMT
  • விழுப்புரம் கோட்டத்துக்கு 180 பஸ்கள், சேலம்-100, கோவை-120, கும்பகோணம்-250, மதுரை-220, நெல்லைக்கு-130 பஸ்கள் என ஒதுக்கப்படுகிறது.
  • ஒரு பஸ் வாங்க ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் ஓடும் பழைய பஸ்களை ஓரம் கட்டி விட்டு புதிதாக 1000 பஸ்கள் வாங்கப்படும் என்று சட்டசபையில் 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 1000 பஸ்கள் வாங்குவதற்காக ரூ.420 கோடியை அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதில் மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கும் சேர்த்து இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் விழுப்புரம் கோட்டத்துக்கு 180 பஸ்கள், சேலம்-100, கோவை-120, கும்பகோணம்-250, மதுரை-220, நெல்லைக்கு-130 பஸ்கள் என ஒதுக்கப்படுகிறது.

அதாவது ஒரு பஸ் வாங்க ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News