தமிழ்நாடு செய்திகள்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-08-24 17:42 IST   |   Update On 2024-08-24 17:42:00 IST
  • இந்து சமய அற நிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது.
  • மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழ் கடவுளான முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் இன்று இந்து சமய அற நிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது.

மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிலையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், " எல்லோருக்கும் எல்லாம் என்ற நமது திராவிட மாடல் அரசில், நாள்தோறும் அறப்பணிகளால் ஆன்மீகப் பெரியோர்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் " என்று அமைச்சர் சேகர்பாபுவை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News