தமிழ்நாடு

விசைப்படகில் சிக்கிய 4 ராட்சத திருக்கை மீன்கள்.

விசைப்படகில் சிக்கிய 4 ராட்சத திருக்கை மீன்- போட்டி போட்டு வாங்கி சென்ற வியாபாரிகள்

Published On 2023-02-15 09:21 GMT   |   Update On 2023-02-15 09:21 GMT
  • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.
  • துறைமுக ஏலக்கூடத்தில் கரை சேர்க்கப்பட்ட இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர்.

குளச்சல்:

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.

இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். கடந்த வாரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 20 விசைப்படகுகள் இன்று காலை குளச்சல் மீன்பிடித்துறைமுகம் திரும்பின. இதில் ஒரு படகில் திரட்சி எனப்படும் 4 ராட்சத திருக்கை மீன்சிக்கியது. அவை தலா 700 கிலோ எடை கொண்டதாக இருந்ததால் இந்த மீன்களை கரை சேர்க்க முடியவில்லை. இதனால் மீனவர்கள் 4 துண்டாக வெட்டி கரை சேர்த்தனர்.

துறைமுக ஏலக்கூடத்தில் கரை சேர்க்கப்பட்ட இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். வியாபாரிகள் இந்த மீனை போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.

Tags:    

Similar News