தமிழ்நாடு

உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில் இடம் பெற வேண்டும்- நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன்

Published On 2023-09-17 03:59 GMT   |   Update On 2023-09-17 03:59 GMT
  • அன்று முதல் இன்று வரை பெரிய கோவிலின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில் சேர்க்கப்பட வேண்டியது தான்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் அம்மன்பேட்டையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் இன்று காலை தஞ்சைக்கு வந்தார்.

பின்னர் அவர் பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

நான் தஞ்சாவூர் நகரை சேர்ந்தவன். இளம் வயதில் இருந்தே நான் பெரிய கோவிலுக்கு பலமுறை சென்று தரிசனம் செய்துள்ளேன். அன்று முதல் இன்று வரை பெரிய கோவிலின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நான் ஆன்மீகத்தையும், தேசியத்தையும் நம்ப கூடியவன்.

தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில் சேர்க்கப்பட வேண்டியது தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது குறித்து அரசாங்கம் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்து வருகிறது என கேட்டு பார்ப்பேன். இது தொடர்பாக எனது தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்டால் அதற்கும் பதில் கூறுவேன்.

மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை கோவிலுக்குள் கொண்டு வந்து வைப்பது குறித்து தொல்லியல் துறை தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News