மணலி சேக்காடு வணிகர் சங்கத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா- விக்கிரமராஜா பங்கேற்பு
- மணலி சேக்காடு வணிகர் சங்கம் சார்பில் 40 - வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்க கொடி ஏற்று விழா நடைபெற்றது.
- மே 5-ந்தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் மணலியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவொற்றியூர்:
மணலியில், மணலி சேக்காடு வணிகர் சங்கம் சார்பில் 40 - வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்க கொடி ஏற்று விழா நடைபெற்றது. மாநில தலைவர் ஏ. எம். விக்கிரம ராஜா கலந்து கொண்டு கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் கொரட்டூர் த. ராமச்சந்திரன் கல்வெட்டினை திறந்து வைத்தார். மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி. மணி, தென் சென்னை மாவட்ட தலைவர் ஒய் . எட்வர்ட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மணலி சங்க பொதுச் செயலாளர் என். மாரிமுத்து வரவேற்று பேசினார். விழாவுக்கு மணலி பேரமைப்பு தலைவர் எம்.பால்ராஜ் தலைமை தாங்கினார். நிதிக்குழு தலைவர் சந்தனா சேகர், சமுத்திர பாண்டி, எஸ். எஸ். காட்வின் ராஜ், இளைஞரணி செயலாளர் சோலை கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடசென்னை வடக்கு மாவட்ட செயல் தலைவர் வி.பி. வில்லியம்ஸ், செயலாளர் சங்கர் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.
கூட்டத்தில் மகளிர் அணி மாவட்ட தலைவி சுமித்ரா, செயலாளர் நிர்மலா, மணலி செயலாளர் கருணாமூர்த்தி, துணை செயலாளர் சரவணன், துணை தலைவர் முத்தையா கோதண்டம், செயலாளர் ராஜேஷ், இளைஞர் அணி நிர்வாகிகள் கோகுல், ஆரோக்கிய செல்வம், அன்பு, சரவணன், தேவேந்திரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜா சங்கர் நன்றி கூறினார். முன்னதாக மாநில தலைவர் விக்கிரம ராஜாவுக்கு வடசென்னை வடக்கு மாவட்ட கிளைச் சங்கங்கள் மற்றும் இளைஞர் அணி சார்பில் மேளதாளத்தோடு வரவேற்பளிக்கப்பட்டது. மே 5-ந்தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் மணலியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.