தமிழ்நாடு செய்திகள்

கணியம்பாடி சுங்க சாவடி ஊழியர்களை விரட்டி விரட்டி தாக்கிய கும்பல்

Published On 2022-12-16 11:03 IST   |   Update On 2022-12-16 11:03:00 IST
  • வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
  • சுங்கசாவடி ஊழியர்களை கும்பல் விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர்.

ஆரணி:

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இதில் 24 மணி நேரமும் வாகனங்களுக்கு சுங்க வரி வசூல் செய்து வருகின்றனர்.

கடந்த 12-ம் தேதி இரவு கும்பல் ஒன்று வந்துள்ளனர். அவர்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சுங்கசாவடி ஊழியர்களை கும்பல் விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர்.இதில் நிலைகுலைந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். பின்னர் சாவகாசமாக கும்பல் அங்கிருந்து சென்றனர்.

சுங்க சாவடியில் ஊழியர்களை கும்பல் தாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுங்க சாவடி ஊழியர்களுக்கும் தாக்குதல் நடத்திய கும்பலுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அதன் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News