கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர்- ஆச்சரியத்துடன் பார்த்த கிராமமக்கள்
- குடும்பத்தினரின் ஆசைக்கு இணங்க கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வான்வழி பயணம் மேற்கொண்டார்.
- நடராஜனின் தந்தை பாலசுப்பிரமணியன். இவர்களது சொந்த ஊர் தெற்கு தீத்தாம்பட்டி.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தீத்தாம்பட்டி கிராமத்தில் பத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராளன பக்கதர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்து அசத்தினார்.
நடராஜனின் தந்தை பாலசுப்பிரமணியன். இவர்களது சொந்த ஊர் தெற்கு தீத்தாம்பட்டி. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டிக்கு அங்கு வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்பத்தினரின் ஆசைக்கு இணங்க கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வான்வழி பயணம் மேற்கொண்டார்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு தீத்தாம்பட்டிக்கு வந்தனர். ஊருக்கு வந்து ஹெலிகாப்டர் ௨ முறை சுற்றியதை அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்தது மட்டுமின்றி செல்பி எடுத்துக் கொண்டனர்.
நடராஜன் தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு பின்னர் அதே ஹெலிகாப்டரில் ஊருக்கு திரும்பினார். இது அந்த கிராமமக்களை ஆச்சரியப்படுத்தியது.