தமிழ்நாடு செய்திகள்

'வ.உ.சி. விருதுக்கு' 24-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

Published On 2022-06-15 12:43 IST   |   Update On 2022-06-15 12:43:00 IST
  • புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ‘‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது” க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் ‘விருது விண்ணப்பம்‘ என்ற பகுதியில் விலையின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' தோற்றுவிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

"கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்"

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ''கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது" க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் 'விருது விண்ணப்பம்' என்ற பகுதியில் விலையின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு வருகிற 24-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-28190412, 044-28190413, மின்னஞ்சல் முகவரி : tamilvalarchithurai@gmail.com ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News