தமிழ்நாடு

ஊட்டியில் 2 நாட்கள் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாடு- கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்

Published On 2024-05-25 04:52 GMT   |   Update On 2024-05-25 04:52 GMT
  • கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரிக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • போலீசார் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ராஜ்பவன் மாளிகை உள்ளது. இங்கு வருகிற 27 மற்றும் 28-ந்தேதி துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இதற்காக இன்று அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நீலகிரிக்கு புறப்படும் அவர் சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு செல்கிறார். ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

அதனை தொடர்ந்து வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 48 பல்லைக்கழகங்களின் துணைவேந்தர்களும் பங்கேற்கின்றனர். துணை வேந்தர்கள் மாநாடு முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி 29-ந்தேதி கோத்தகிரி பகுதியை சுற்றி பார்க்க உள்ளார்.

கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரிக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியிலும் இன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News