தமிழ்நாடு

திருவாலங்காடு அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி

Published On 2023-09-23 06:59 GMT   |   Update On 2023-09-23 06:59 GMT
  • சிகிச்சை பலனின்றி பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். 10-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருத்தனி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு தன்ராஜ் கண்டிகை கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்கிற பூபாலன் என்பவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பூபாலனுக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரது உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தார். மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News