தமிழ்நாடு

இந்த ஆண்டு குடியரசு தின விழாவை உழைப்பாளர் சிலை அருகே நடத்த ஏற்பாடு

Published On 2023-01-06 06:16 GMT   |   Update On 2023-01-06 06:16 GMT
  • உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஒத்திகை கடற்கரை சாலையில் 20, 22, 24 ஆகிய தேதியில் இருந்து 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகின்ற 26-ம் தேதி உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை, மெரினா சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. குறிப்பாக முப்படை, தேசிய மாணவர் படை ,மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவல் துறை, தீயணைப்பு துறை அணிவகுப்பும் ஒத்திகையில் பங்கேற்க உள்ளனர். பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும்.

இந்த நிலையில், வழக்கமாக ஆண்டு தோறும் மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பாக குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் மெட்ரோ பணிகள் காரணமாக இந்த ஆண்டு அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

எனவே, உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்கான ஒத்திகை கடற்கரை சாலையில் 20, 22, 24 ஆகிய தேதியில் இருந்து 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மெரினாவில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News