தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்களை இணையதளத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு

Update: 2022-07-02 09:19 GMT
  • ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னை:

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தகுதி தேர்வு தாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தகுதி தேர்வு 2-க்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேரும் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

வருகிற 11-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இனி வரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது என வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News