தமிழ்நாடு செய்திகள்
ஸ்டாலினின் சிவந்த கண்கள்... சாலைகள் முகம் மாறுகிறது!
- ஆய்வுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் பார்த்துவிட்டு அதிகாரிகளின் சமாளிப்பை உணர்ந்து கண்கள் சிவந்துள்ளார்.
- முதல்வரின் கோபத்தை புரிந்து கொண்டதும், சாலையை சீரமைப்பதில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்.
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள், குடிநீர் வாரிய பணிகள் என்று பெரும்பாலான சாலைகள் மக்கள் வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக உள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வுக்கு வருவதாக அறிவித்ததும் அவர் செல்லும் பாதைகளில் அவசர அவசரமாக பஞ்சர் ஒட்டும் வேலைகள் நடந்தன. ஆய்வுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் பார்த்துவிட்டு அதிகாரிகளின் சமாளிப்பை உணர்ந்து கண்கள் சிவந்துள்ளார்.
முதல்வரின் கோபத்தை புரிந்து கொண்டதும், சாலையை சீரமைப்பதில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். பணிகள் நடந்தாலும் மக்கள் பயணத்துக்கான சாலைகள் அடுத்த 20 நாட்களுக்குள் தரமான சாலைகளாக மாற்றி தரப்படும் என்று கூறி இருக்கிறார்கள்.