தமிழ்நாடு

காரில் இருந்த வாளியில் மண்டை ஓடு உள்ளதை படத்தில் காணலாம்.

மரக்காணத்தில் வாகனங்கள் ஏலம்- காரில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு

Published On 2022-11-09 07:59 GMT   |   Update On 2022-11-09 07:59 GMT
  • கோவை, சென்னை, புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நபர்கள் வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக முன்பணம் கட்டி இருந்தனர்.
  • திட்டமிட்டபடி இன்று காலை ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் 24 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் என 28 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் மதுவிலக்கு சோதனையின் போது ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் அனைத்தும் மரக்காணம் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த வாகனங்கள் அனைத்தும் இன்று (9-ந்தேதி) ஏலம் விடப்படும் என்றுஅறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கோவை, சென்னை, புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நபர்கள் வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக முன்பணம் கட்டி இருந்தனர்.

திட்டமிட்டபடி இன்று காலை ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் 24 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் என 28 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

அப்போது ஒரு கார் ஏலம் விடப்பட்ட போது காரில் இருந்த பிளாஸ்டிக் வாளியில் மண்டை ஓடு கிடந்தது. இதனை பார்த்ததும் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். எனவே அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த மரக்காணம் போலீசார் அங்கு விரைந்தனர். மண்டை ஓட்டினை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த மண்டை ஓடு காருக்குள் எப்படி வந்தது. இதனை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News