தமிழ்நாடு

அனைத்து ரெயில்களும் நின்று செல்ல கோரி கடம்பூரில் கடையடைப்பு போராட்டம்

Published On 2023-02-21 07:20 GMT   |   Update On 2023-02-21 07:20 GMT
  • கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
  • போராட்டத்தில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். கடையடைப்பு காரணமாக கடம்பூர் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் நகரம் முக்கிய இடமாக உள்ளது. கொரோனா காலத்திற்கு முன்னர் இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.

ஆனால் தற்போது கோவில்பட்டியில் நிறுத்தப்படும் ரெயில்கள் அதன் பின்னர் கடம்பூரில் நிற்காமல் நெல்லையில் நின்று செல்கிறது. இதனால் தங்கள் பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதனால் கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வியாபாரிகள் சங்க மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் தனசேகரன், துணைத்தலைவர்கள் ராஜபாண்டி, முருகன் மற்றும் புஷ்பகணேஷ், சந்திரசேகரன், ஆசிர், அய்யலுசாமி, கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் போராட்டத்தில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். கடையடைப்பு காரணமாக கடம்பூர் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News