தமிழ்நாடு செய்திகள்

சாலையோரம் அமர்ந்து மது குடிக்கும் போதை கும்பலால் பெண்கள் அச்சம்

Published On 2023-11-14 14:18 IST   |   Update On 2023-11-14 14:18:00 IST
  • மார்க்கெட் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.
  • காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.9 கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், ராஜாஜி மார்க்கெட் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மதுக்கடை செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மது பிரியர்கள் இங்கு மதுவாங்கிவிட்டு சாலை யோரம் அமர்ந்து அங்கேயே குடித்து வருகின்றனர். இதனால் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அவர்கள் அந்த பாதையை தவிர்த்து சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் போதை நபர்கள் அங்கேயே கும்பலாக நின்று ரகளையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடமாக விளங்கும் ராஜாஜி மார்க்கெட் வரவே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மார்க்கெட் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும். சாலையில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தீபாவளி பண்டிகையின் போது காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.9 கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News