தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் மழை - மீண்டும்.. மீண்டுமா?... அச்சத்தில் மக்கள்

Published On 2023-12-15 13:10 IST   |   Update On 2023-12-15 13:56:00 IST
  • தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
  • சென்னையில் அடையாறு, கிண்டி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை:

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, சென்னையில் அடையாறு, கிண்டி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்து வருகிறது.

மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல சென்னை மக்கள் மீண்டு வரும் நிலையில், இன்று மீண்டும் மழை பெய்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News