தமிழ்நாடு செய்திகள்

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2022-07-28 22:04 IST   |   Update On 2022-07-28 22:04:00 IST
  • பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
  • ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ஜோதி ஏற்று பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைத்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவை தொடர்ந்து, சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், 2024-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் பிரதிநிதித்துவம் பெறுவது குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

Tags:    

Similar News