தமிழ்நாடு செய்திகள்

என்னை வாழ வைத்த தெய்வம் எம்.ஜி.ஆருக்குத்தான் என் முதல் நன்றி- அமைச்சர் பேச்சு

Published On 2022-12-17 12:16 IST   |   Update On 2022-12-17 12:16:00 IST
  • தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
  • எழிலரசன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் தசரதன், சுகுமார், பி.எம். குமார், சன் பிராண்ட் ஆறுமுகம், சந்துரு, கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

நன்றி என்று பார்த்தால் என் முதல் நன்றி எம்.ஜி.ஆருக்கு தான். ஆனால் கட்சி என்று பார்த்தால் தி.மு.க. தான் என்னுடைய கட்சி. எம்.ஜி.ஆர். தான் என்னை வாழ வைத்த தெய்வம். வணக்கத்திற்கு உரியவர்.

என்றும் வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளுக்கு எல்லாம் ஓடுகிறவன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி., காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்,

எழிலரசன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் தசரதன், சுகுமார், பி.எம். குமார், சன் பிராண்ட் ஆறுமுகம், சந்துரு, கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News