தமிழ்நாடு செய்திகள்

சிகிச்சைக்கு பின் அமைச்சர் மெய்யநாதன் டிஸ்சார்ஜ்

Published On 2022-10-01 10:04 IST   |   Update On 2022-10-01 10:04:00 IST
  • அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின்போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
  • அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு வருகை தருவதற்காக பயணம் செய்தார்.

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின்போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அமைச்சர் சிகிச்சை பெற்று வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் மெய்யநாதனின் உடல்நிலை சீரானதை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Tags:    

Similar News