தமிழ்நாடு செய்திகள்

ஏரிகளில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

Published On 2023-04-18 11:32 IST   |   Update On 2023-04-18 12:46:00 IST
  • ஏரிகளை பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்படுவார்களா? கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
  • ஏரிகளில் கழிவு நீர் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறினார்.

சென்னை:

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேசியதாவது:-

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளை சுற்றி உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குப்பைகளையும் கழிவுகளையும் ஏரிகளில் கொட்டுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதாகவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் ஏரிகளைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படுமா? ஏரிகளை பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்படுவார்களா? கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

சென்னை மக்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200 எம்.எல்.டி குடிநீர் கூடுதலாக வழங்கப்பட்டு வருவதாகவும், ஏரிகள் அனைத்தும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், ஏரிகளில் கழிவு நீர் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், கழிவுநீர் எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதோடு, லாரிகள் எங்கு செல்கிறது என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Tags:    

Similar News