தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 286 கன அடியாக அதிகரிப்பு

Published On 2024-06-05 10:38 IST   |   Update On 2024-06-05 10:38:00 IST
  • மேட்டூர் அணைக்கு நேற்று 89 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 286 கன அடியாக அதிகரித்துள்ளது.
  • நேற்று 45.47 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 45.18அடியாக குறைந்தது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. தற்போது போதிய அளவில் மழை இல்லதாதால் மேட்டூர் அணைக்கு நேற்று 89 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 286 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 45.47 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 45.18அடியாக குறைந்தது. நீர் இருப்பு 14.91 டி.எம்.சி.யாக உள்ளது.

Tags:    

Similar News