தமிழ்நாடு (Tamil Nadu)

மேட்டூர் அணை நீர்மட்டம் 58.15 அடியை எட்டியது

Published On 2023-11-11 03:41 GMT   |   Update On 2023-11-11 03:41 GMT
  • அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • தற்போது மேட்டூர் அணையில் 23.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வரும் நிலையில் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 445 கனஅடி வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 8 ஆயிரத்து 424 கனஅடியாக குறைந்தது.

இதே போல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58.15 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 23.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News